Gopichand Malineni இயக்கத்தில், நடிகர் பாலகிருஷ்ணா உடன் நடிகை நயன்தாரா நடிக்கும் NBK-111.நயன்தாரா பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு படக்குழு வாழ்த்து.மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது. அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்று பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகும், கம்பீரமும் கலந்த நடிகை நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடி நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.