தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர், போலீசாரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 18 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வலியுறுத்தி சுகாதாரத்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது