பிரான்சின் மேற்கு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹெர்மினியா புயலின் கோரத்தாண்டவத்தால் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, ரென்னெஸ் நகரமே நீரில் மூழ்கியது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.