தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.