கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் விமானத்தில் வந்த மலப்புரம் பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் கஞ்சா எடுத்து வந்த நிலையில், வசமாக சிக்கினார்.