நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி நெல்லையில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறும் என்றும், அடுத்து எந்த ஊர்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.