அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் 98ஆவது ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் "HOME BOUND" திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவிலும் "HOME BOUND" திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.