ராயல் என்பீல்டுக்கு போட்டியாக 500சிசி கொண்ட பைக்கை ஹோண்டா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹோண்டா நிறுவனத்தின் GB350 என்ற மோட்டார் சைக்கிள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், GB500 என்ற புதிய மாடல் இருசக்க வாகனத்தை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக், ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க நினைப்போருக்கு மாற்று ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.