ஹோண்டா நிறுவனம் CBR 650R மற்றும் CB 650R ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2 பைக்கிலும் 649 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் CBR 650R பைக்கின் விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்றும் CB 650R பைக்கின் விலை 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.