கர்நாடகாவில், மனைவி சித்தரவதை செய்வதாக கூறி கணவன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹுப்பாளி சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த பெட்டரு கோலப்பள்ளி என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் பெட்டரு கோலப்பள்ளிக்கு வேலை பறிபோனதால், அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி 20 லட்சம் ரூபாய் தருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.