news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மக்களால் நான், மக்களுக்காகவே நான்...
tv

Also Watch

மக்களால் நான், மக்களுக்காகவே நான்...

பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாள்

143

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர், 29 ஆண்டுகள் அதிமுகவின் பொதுச்செயலாளர், 18 ஆண்டுகள் திரைப்பட நடிகை என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. முதலமைச்சராக எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். மக்கள் மனதிலும், கட்சித் தொண்டர்களின் இதயத்திலும் நீங்கா இடத்தைப் பெற்ற மகத்தான தலைவியின் பிறந்தநாளில், அவரை பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

* அம்மா, அம்மா என்ற அன்புக் குரலுக்கு சொந்தக்காரர்
* சிறு வயதிலேயே நினைவாற்றல், அறிவாற்றல்
* சர்ச் பார்க் பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம்


அம்மா, அம்மா என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் அழைத்த அன்புக் குரலுக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என, ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர். சிறு வயதிலேயே நினைவாற்றல், அறிவாற்றலுடன் விளங்கிய ஜெயலலிதா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தபோது, பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

* வெண்ணிற ஆடை படத்தில் முதன்முதலில் நடிக்கத் தொடங்கிய ஜெ.
* ஏராளமான படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்
* புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 28 படங்களில் நடித்தார்


சிறு வயதிலேயே பரத நாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக, பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு திரைத்துறையில் நுழைந்தார். வெண்ணிற ஆடை படத்தில், முதன்முதலில் நடிக்கத் தொடங்கிய அவர், ஏராளமான படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.

* சிவாஜி கணேசனுடன் 17 படங்களில் நடித்து வெற்றியின் சிகரம் தொட்டார்
* ஒரே ஆண்டில் 20 படங்களில் நடித்த முன்னணி நடிகை
* 127 படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா, 11 பாடல்களைப் பாடியுள்ளார்


ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், கன்னித்தாய், முகராசி, காவல்காரன் என புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 28 படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்தார்.

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா', 'தெய்வ மகன்', 'சவாலே சமாளி', 'எங்கிருந்தோ வந்தாள்' உள்ளிட்ட 17 படங்கள் வெற்றியின் சிகரம் தொட்டன.
ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல்வேறு நடிகர்களுடன் பல்வேறு மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். ஒரே ஆண்டில் 20 படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
127 படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா 11 பாடல்களைப் பாடி பாடகியாகவும் தன்னை நிரூபித்தார்.

* 1980ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
* கொள்கை பரப்புச் செயலாளர், சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்


1980ல் எம்ஜிஆர் முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் அறிவாற்றல் காரணமாகவும், கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உழைத்ததாலும் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர். 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலம் குன்றி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

* ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்
* 1984 - எம்ஜிஆர் உடல்நலம் குன்றியபோது சூறாவளிப் பிரச்சாரம்


எம்ஜிஆர் மறைவுக்குப் பின், இரு அணிகளாக பிரிந்திருந்த அதிமுகவை இணைத்து அக்கட்சியை மீண்டும் வலிமைப்படுத்தினார். 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

* எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இரு அணிகளாக பிரிந்திருந்த அதிமுக
* இரு அணிகளை மீண்டும் இணைத்து அதிமுகவை வலுப்படுத்திய ஜெயலலிதா


ஜெயலலிதாவின் ஒவ்வொரு ஆட்சிக்காலத்தில், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி முத்திரை பதித்தார். பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில் அவர் தொடங்கிய தொட்டில் குழந்தை திட்டத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.

* 1991, 2001, 2011, 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர்
* பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் தொட்டில் குழந்தை திட்டம்
* ஐ.நா. சபையில் கைதட்டைப் பெற்ற முதல் பெண் முதலமைச்சர்


குறிப்பாக மழைநீர் சேமிப்பு திட்டம் மூலம் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. அது மட்டுமின்றி ரேஷனில் இலவச அரிசி, அனைத்து மகளிர் காவல்நிலையம், அம்மா உணவகம், இலவச லேப்டாப் போன்றவை விரிவுபடுத்தப்பட்டு தற்போதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்களுடன் நெருங்கிய நட்பு
* அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்


தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார் ஜெயலலிதா. வாஜ்பாய், பிரதமர் மோடி, சந்திரபாபு, முலாயம் சிங் போன்ற தேசிய மற்றும் பிற மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு பலமுறை ஆலோசனைகளை மேற்கொண்டார்.
அரசியலில் பெண்களால் சாதிக்கமுடியும் என்பதை தமது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களில், குறிப்பாக பெண்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஜெயலலிதா.

Related Link
ஜெயலலிதா பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழாரம்

ஜெயலலிதா பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழாரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

11
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved