மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது. பின்னர், 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,15 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.