Gsquare நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதற்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஜி ஸ்குயர் அளித்துள்ள விளக்கத்தில், பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் எந்த சொத்தோ, நிலமோ தங்களுக்கு இல்லை என்றும், இந்த கிராமங்களில் ஜி ஸ்கொயர் பெயரிலோ அல்லது நிறுவன ஊழியர்கள் பெயரிலோ நிலம் இருப்பதாக நிரூபிக்கும் நபருக்கு அந்த நிலத்தை இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.