அமெரிக்க அதிபராக முன்பே டிரம்ப் இருந்திருந்தால் உக்ரைனுடன் மோதல் ஏற்பட்டிருக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு இசைவு தெரிவித்து புதின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, டிரம்ப் மிகவும் புத்திசாலி தலைவர் என புகழ்ந்து பேசினார்.