அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி சரியான நவடிக்கையை மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பிரதமர் மோடியிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.