2025-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ((GST)) வசூல் மொத்தமாக, ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024- ம் ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 12 புள்ளி 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.