கணவனின் அந்தரங்க உறுப்பை மிதித்து துடிக்க துடிக்க கொலை செய்த மனைவி. கணவனை கொன்றுவிட்டு எங்கும் தப்பிச் செல்லாமல், விடிய விடிய சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அதிர்ச்சி. கணவனை மனைவியே துடிதுடிக்க கொலை செய்ததற்கு என்ன காரணம்? 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது எப்படி? நடந்தது என்ன?வீட்டுல ஆழ்ந்து தூங்கிட்டு இருந்த ஒரு பெண்ணுக்கு, உறவினரான சவிதாக்கிட்ட இருந்து ஃபோன் கால் வந்திருக்கு. காலங்காத்தாலேயே இவங்க எதுக்கு ஃபோன் பண்றாங்கன்னு முனங்கிக்கிட்டே, அரைகுறை தூக்கத்துல, அந்த ஃபோன் கால அட்டண்ட் பண்ணி பேசிருக்காங்க. அப்போ, என் புருஷன கொன்னுட்டேன், இப்போ என்ன பண்றதுன்னு தெரியல, நீ சீக்கிரம் வீட்டுக்கு வரியான்னு கேட்டுருக்காங்க சவிதா. அரைகுறை தூக்கத்துலேயே பேசுன அந்த பெண், சவிதா சொன்னத கேட்டதும் டக்குன்னு விழிப்பாகி, அதிர்ச்சியடஞ்சிருக்காங்க. என்ன சொல்ற, ஏன் இப்படி பண்ணன்னு அந்த உறவுக்கார பெண் அடுக்கடுக்கா கேள்விகளா கேட்டுருக்காங்க. ஆனா, அந்த கேள்விகளுக்கு பதில் ஏதும் சொல்லாம, சவிதா ஃபோன கட் பண்ணிருக்காங்க.விஷயத்த கேட்டு அரண்டு போன அந்த உறவுக்கார பெண், உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. அடுத்த கொஞ்ச நேரத்துலேயே சம்பவ இடத்துக்கு போய் போலீஸ் பாத்தப்போ, கணவனோட சடலத்துக்கு பக்கத்துலேயே டீயும், ரஸ்க்கும் சாப்பிட்டுக்கிட்டு உக்காந்திருந்துருக்காங்க சவிதா. அதுக்கப்புறம், நடந்த விசாரணையிலதான், தாலி கட்டுன கணவன காவு கொடுத்தது ஏன் அப்டிங்குறத, சவிதா போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க. ஹரியானா மாநிலம் சோனிபட் நகர்ல காமி-அப்டிங்குற பகுதிய சேந்த சவிதாவுக்கும், ராம் கிஷன் தம்பதிக்கு கல்யாணமாகி 15 வருஷம் ஆகுது. இவங்களுக்கு மூணு மகன்கள் இருக்காங்க. சவிதா, தன்னோட வீட்டு பக்கத்துலேயே சின்ன அளவுல மளிகை கடை நடத்திட்டு வந்திருக்காங்க. இதுக்கு நடுவுல, கடைக்கு உணவு பொருட்கள கொண்டு வந்து கொடுக்குற நபரோட அவங்களுக்கு பழக்கம் எற்பட்டிருக்கு.இந்த பழக்கம் நாளடைவுல திருமணத்த மீறுன உறவா மாறிருக்கு. ராம் வேலைக்கு போன நேரம் பாத்து, அந்த நபர வீட்டுக்கு வரவச்சு தனிமையில இருந்துருக்காங்க சவிதா. இத பாத்து அக்கம் பக்கத்துல உள்ளவங்க ராம் கிட்ட சொல்லிருக்காங்க. விஷயத்த கேட்டு கடுப்பானவரு, தன்னோட மனைவிய கண்டிச்சிருக்காரு. ஆனா, அதுக்கப்புறமும் சவிதா தன்னோட தகாத உறவ கைவிடாம தொடர்ந்துட்டே இருந்துருக்காங்க. இவ்வளவு சொல்லியும் திருந்தாம உன் இஷ்டத்துக்கு பன்றயானு ராம், சவிதாவ அடிச்சிருக்காரு. இனிமே நீ கடைக்கே போக வேண்டாம், கடைய வேற யாருக்காவது வாடகைக்கு விட்ருவோம்னு சொன்னதோட, மனைவியோட செல்போனையும் வாங்கி வச்சிக்கிட்டாரு. சவிதாவுக்கு அந்த நபர்கூட மட்டுமில்லாம, பல ஆண்களோட தொடர்பு இருந்ததாதவும் சொல்லப்படுது. சம்பவம் நடந்த 5ஆம் தேதி நைட்டு, ஃபுல் போதையில வீட்டுக்கு வந்த ராம், மனைவிகிட்ட சண்ட போட்ருக்காரு. பதிலுக்கு சவிதாவும் பேசி தகராறு பண்ணிருக்காங்க. இப்படியே, வாக்குவாதம் நீண்டுக்கிட்டே போனதால அவங்கள அடிக்க பாஞ்சிருக்காரு ராம். மனைவிக்கு நெறைய ஆண்களோட தகாத உறவு இருக்குறத நினைச்சு ஏற்கனவே ஆத்திரத்துல இருந்த ராம், மனைவிய தகாத வார்த்தைல பேசி அடிச்சு மிதிச்சு துன்புறுத்தியிருக்காரு. பொறுத்து பொறுத்து போன சவிதாவுக்கு கோவம் தலைக்கு மேல ஏறியிருக்கு. திடீர்னு ஆவேசமாவங்க, கணவர் ராம அடிச்சு கீழே தள்ளிவிட்டுருக்காங்க. கீழே விழுந்தவர் மேல ஏறி உக்காந்த சவிதா, அவரோட வாயில ஒரு துணிய திணிச்சு கழுத்த நெரிச்சிருக்காங்க. அப்பவும் வெறி தீராத சவிதா, கணவரோட பிறப்புறுப்ப தன்னோட கால்களால மிதிச்சிருக்காங்க. வலி தாங்க முடியாம துடிதுடிச்சு போன ராம் கொஞ்ச நேரத்துலேயே உயிரிழந்துட்டாரு. அதுக்கப்புறம், பொழுது விடியுற வரைக்கும் கணவனோட சடலத்துக்கு பக்கத்துலேயே உக்காந்திருந்த சவிதா, காலையில ஆறு மணிக்கு, உறவுக்கார பெண்ணுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லிட்டு, வழக்கம்போல கிச்சனுக்கு போய் டீ போட்டு கொண்டு வந்து கணவன் சடலத்துக்கு பக்கத்துலேயே உக்காந்து டீயையும், ரஸ்கையும் சாப்பிட்டுட்டு இருந்துருக்காங்க. விசாரணைக்கு அப்புறம், சவிதாவ அரெஸ்ட் பண்ண போலீஸ், அவங்கள சிறையில அடச்சிட்டாங்க. தகாத உறவால ஏற்பட்ட பிரச்சினை கடைசியில கொடூரக் கொலையில போய் முடிஞ்சிருக்கு. இதையும் பாருங்கள் - தனிமைக்குப் பின் நடந்த அதிபயங்கரம்