மகா கும்பமேளாவை யொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு செல்வதற்கான விமான கட்டணங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி-பிரயாக்ராஜ் இடையேயான விமானக் கட்டணம் நான்கு மடங்கு உயர்ந்து ரூ.50,000 க்கும் அதிகமாக உள்ள நிலையில் மவுனி அமாவாசையை முன்னிட்டு இன்னும் ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுப்பார்கள் என்பதால் இந்த கட்டணம் ஒரு லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.