வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 110 ரூபாய் உயர்ந்து 19 கிலோ கொண்ட சிலிண்டர் ஆயிரத்து 849 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் 2026 ஆண்டின் முதல் நாளிலேயே, வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இன்றி 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.