19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. 65 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது.