காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு, இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 மீனவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், 13 பேரை சிறைப்பிடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசிடம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.