பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு நாடு இல்லை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள கன்டோன்மென்டில் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தினார்.