பாலிவுட் திரைப்படமான “ஹோம்பவுண்ட்” ஆஸ்கார் விருது போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வட இந்திய மாநிலங்களின் அவலநிலையையும், படித்தும் வேலையின்றி அல்லல்படும் இளைஞர்களின் தவிப்பையும், புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட இன்னல்களையும் சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட இந்தி மொழி திரைப்படம் ‘ஹோம்பவுண்ட்’. இந்த படம் சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் போட்டிக்கான 15 படங்கள் கொண்ட பட்டியலில் தேர்வாகி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.