இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பூரி கடற்கரையில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தில் கடற்படையின் பங்கை நினைவுகூரும் விதமாக நாளை இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ள நிலையில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது