சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்.மதினாவில் இருந்து மெக்கா நகருக்கு பேருந்தில் உம்ரா புனிதப்பயணம் சென்றபோது டேங்கர் லாரி மோதி பெரும் விபத்து.மதினா அருகே பேருந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தோர் அனைவரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்.ஹைதராபாத்தில் இருந்து குழுவாக உம்ரா புனிதப் பயணம் சென்ற 42 பேர் உயிரை விட்ட சோகம்.மதினா அருகே பேருந்து தீ விபத்தில் தெலங்கானா யாத்ரீகர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி.ரியாத் மற்றும் ஜெட்டா நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிக்கை.