இந்திய பங்கு பத்திர விற்பனையில் ஈடுபட தென்கொரியாவின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜிக்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஒப்புதல் வழங்கி உள்ளது. இதை அடுத்து எல்ஜி, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு தனது பங்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.