கேரளாவில் ஆடம்பர வாழ்க்கைக்காக தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த இன்ஸ்டாகிராம் பெண் பிரபலத்தை போலீஸார் கைது செய்தனர். கொல்லம் மாவட்டம் சிதறம் பகுதியை சேர்ந்த முபீனா, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், தனது ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை உயர்ந்த செல்போன் வாங்குவதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நகை திருடி வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் தோழியின் வீட்டிற்குள் புகுந்து 8 சவரன் தங்க செயினை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் முபீனாவை போலீஸார் கைது செய்தனர்.