பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவுகளை நிறைவேற்றுவதற்காக, உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் , திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 9ஆம் தேதி, உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக கூறினார்.