அமெரிக்க செயலிகளுக்கே சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது.2023ஆம் ஆண்டில் சீன ஹெட்ஜ் ஃபண்ட் ((Hedge fund))தலைவரான லியாங் வென்ஃபெங் ((Liang Wenfeng))என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக்.இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசம் என்ற நிலையில் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது. டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் என்பதால் இந்த புதிய போட்டியாளரை கண்டு அமெரிக்க நிறுவனங்கள் நடுக்கத்தில் உள்ளன.