கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் முதல் முறையாக பதவி ஏற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரி, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷ் வர்தன், முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று பதவி ஏற்க சென்ற போது அவரின் கார் விபத்தில் சிக்கியது.