கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு செய்தார் என்ற முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீதான புகாரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் அளிக்கப்பட்ட இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் பாருங்கள் - இபிஎஸ்க்கு எதிரான புகார், சிபிஐ விசாரிக்க மனு | Edappadi Palaniswami | CBI Enquiry