பார்முலா-இ ரேஸ் தொடர்பான வழக்கில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்வந்தால் தாமும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி ராம ராவ் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்த பின் பேசிய அவர், அமலாக்கத்துறையால் கைதான ரேவந்த் ரெட்டி, தாமும் அவ்வாறு கைது செய்யப்பட விரும்புவதாக குற்றம் சாட்டினார்.