காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 22 குழந்தைகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்று பயணத்தை முடித்த வேளையில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. வியாழக்கிழமை இரவு டெய்ர் அல்-பாலா மற்றும் கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 64 கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் வருகை ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் அல்லது காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை புதுப்பிக்கும் என்ற பரவலான நம்பிக்கை இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.