வரலாற்று சாதனையாக இஸ்ரோ செலுத்த உள்ள 100 ஆவது ராக்கெட்டின் கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று துவங்கியது. இந்த GSLV ராக்கெட் Navigation செயற்கைக் கோளை சுமந்து கொண்டு நாளை காலை 6.23 மணி அளவில் விண்ணில் பாயும் என கூறப்படுகிறது.GSLV யின் இந்த 17 ஆவது ராக்கெட்டில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரியோஜெனிக் அப்பர் ஸ்டேஜ் பொருத்தப்பட்டுள்ளது, NVS-02 என்ற Navigation செயற்கைக் கோளை சுமந்து செல்லும் GSLV ராக்கெட் 27 மணி நேர கவுன்ட்டவுனுக்குப் பிறகு விண்ணில் பாயும்.