பெரியாரையும், திராவிடம் பேசுபவர்களையும் எதிர்ப்பது தான் தனது கொள்கை என செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த சீமான், பெரியார் ஒழிக அல்ல, பிரபாகரன் வாழ்க என்பதே தனது முழக்கம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரியாரை எதிர்ப்பது தனது கொள்கை இல்லை என்பது போல பேசியிருந்தார். இந்நிலையில், அதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரியார் ஆதரவாளர்கள் வரலாற்றிலேயே ஒரு எதிரியை முதல்முறையாக சந்திப்பதாக பேசியிருப்பது, தனது கொள்கை என்ன என்பதை தீர்மானிப்பதில் சீமான் குழப்பத்தில் உள்ளாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.