வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு போஸ்டர் வெளியிட்டு, அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிம்புவும், வெற்றிமாறனும் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படும் இப்படத்தில் ஹீரோ சிம்புவுக்கு, விஜய் சேதுபதி வில்லனாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.