பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள்.சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற எச்சரிக்கையையும் மீறி, தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்.ஜாக்டோ-ஜியோ குழுவினரின் 10 அம்ச கோரிக்கைகள்...தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41ஆவது கால பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு நடத்தக்கூடாது, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வையும், பணி நிரந்தரமும் செய்யப்பட வேண்டும். இந்த 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.