மலையாள திரையுலகில் முன்னனி நடிகராக திகழும் ஜெயிலர் படத்தின் வில்லன் விநாயகன் மீண்டும் மதுபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுபோதையில் தனது வீட்டிலிருந்தபடி சாலையில் செல்வோரை தகாத வார்த்தையில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி முகநூலில் பதிவிட்டுள்ளார்.