குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பங்கேற்பது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்பின் கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.