தங்கம் விலையில் இன்று ஒரேநாளில் ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம்சென்னையில் இன்று காலை நிலரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. இந்நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.1,040 உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு லட்சத்தை கடந்த...ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை, காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.500 குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று 24ஆம் தேதி, காலை ஒரு சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ரூ.1,16,960க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை ஆனது.தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு சர்வதேச முதலீட்டாளர்களும், பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஜனவரி 22ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது. Related Link டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி