வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை மக்களவையில் இன்று தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுக் குழுவின் தலைவரான பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் மற்றும் மற்றோர் எம்பியான சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிக்கையை இந்தியிலும், ஆங்கிலத்திலும் தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.