கர்நாடக மாநில சட்டப்பேரவையில், அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்துள்ளார். உரையில் மாற்றம் செய்து வாசிக்க இருந்ததை எதிர்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால், அவர் வெளியேறினார்.சட்டசபையில், ஆளுநர் உரை ஆண்டுதோறும், சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் துவங்கும் போது, ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த உரையில், மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள், மக்களுக்கு கிடைத்துள்ள பயன்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவரிப்பது வழக்கம். ஆளுநரின் உரையை தயாரிப்பது, மாநில அரசு என்பதால் உரை முழுவதும், அரசை பற்றிய புகழுரையாக இருக்கும். மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பது, பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கம் தான்.விதிமுறைகள் இல்லாத ஆளுநர் உரைமாநில அரசின் உரையை, ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை. உரையில் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால், அதை நீக்கும்படி அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. உரையை அப்படியே வாசிக்கும்படி ஆளுநருக்கு, அரசு தரப்பில் அழுத்தம் தர முடியாது. கர்நாடக சட்டசபையில் என்ன நடந்தது?இன்று காலை, வழக்கம் போல், கர்நாடக மாநில சட்டசபை கூடியது. அவை கூடியதும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அரசின் உரையில் தவறான தகவல் உள்ளதாக உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார். அவை உரையில் 3 வாக்கியங்களை மட்டுமே படித்தார். அவர் உரையை படிக்காமல் வெளியேறியதால் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடகா சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பத்துடன் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், கேரள சட்டசபையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா கண்டனம்ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியது குறித்து சட்டசபையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் 176,163ஆவது பிரிவுகளை ஆளுநர் மீறியுள்ளார். கர்நாடக ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஆளுநர் உரையை படிக்காமல் சென்றது குறித்து உச்சநீதி மன்றத்திற்கு செல்வது தொடர்பாக பரிசீலனை செய்வோம். கர்நாடகா ஆளுநரின் போக்கை கண்டித்து போராட்டங்கள் நடத்த உள்ளோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - பியூஸ் கோயல் கூறிய தகவல்