உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.