ஒலிம்பிக்கில் இரட்டை மெடல் வென்ற மனு பார்க்கர், உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய ஹாக்கி ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் மாற்றுத் திறனாளி தடகள வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.