பிரபல கார் நிறுவனங்களின் ஒன்றான கியா நிறுவனத்தின் சைரோஸ் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமான இந்த காருக்கான முன்பதிவு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் HTK மாடல் 9 லட்சத்திற்கும், டாப் எண்ட் மாடல் அதிகபட்சமாக 17 லட்சத்து 80 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.