கியா அதன் SUV காரான சைரோஸ் மாடலை டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. சோனட் மற்றும் செல்டோஸ் இடையே நிலைநிறுத்தப்பட்ட சைரோஸ், கியாவின் சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு மாடலாக பார்க்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான வெளிப்புற வடிவமைப்பு உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.