தெலங்கானா, லட்சுமிபுரம்... கால்வாய் ஓரத்தில் கரை ஒதுங்கிய இளைஞரின் சடலம். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். உயிரிழந்தவரின் மனைவி மீதும், தந்தை மீதும் சந்தேகம். போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் வெளியான அதிர்ச்சி தகவல். வீட்டில் இருந்து தப்பித்து ஓடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ். விசாரணையின் இறுதியில் காத்திருந்த மெகா ட்விஸ்ட். இளைஞரை கொன்று கால்வாயில் வீசியது யார்? பின்னணி என்ன? 5ஆம் தேதி, லட்சுமிபுரம் பகுதியில உள்ள கால்வாய் ஓரமா கிராமத்தை சேர்ந்த சிலர் உட்காந்துட்டு இருந்தாங்க. அப்ப கரையோரமா அஞ்சய்யா-ங்குற நபரோட சடலம் ஒதுங்கிருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச கிராம மக்கள், உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அஞ்சய்யா உயிரிழந்த விஷயம், காட்டுத்தீ போல அந்த ஏரியா ஃபுல்லா பரவிருக்கு. இந்த சம்பவத்த கேட்டு ஓடி வந்த அஞ்சய்யாவோட மனைவி சிரிஷாவும், தந்தை லச்சய்யாவும் அஞ்சய்யாவோட சடலத்த பாத்து கதறி அழுதுருக்காங்க. அதுக்கப்புறம் சிரிஷா கிட்டயும், தந்தை லச்சய்யா கிட்டயும் போலீஸ் விசாரணை பண்ணிருக்காங்க. உங்க கணவர் எப்ப காணாம போனாங்க, என்ன ஆச்சு அவருக்குன்னு கேட்ருக்காங்க...அதுக்கு சிரிஷா, 3 நாட்களா என் கணவர காணேம், நாங்க பல இடங்கள்ல தேடிப் பாத்தோம் அவர காணல, அதனால அவரே வீட்டுக்கு வந்துருவாருன்னு நினைச்சோம்ன்னு சொல்லிருக்காங்க. அதுமட்டும் இல்லாம என் கணவர் சரியான குடிகாரன், குடிச்சுட்டு வந்து இங்க விழுந்து உயிரிழந்துருப்பான்னு சொல்லிருக்காங்க சிரிஷா. சரி, அதெல்லாம் இருக்கட்டும் அஞ்சய்யா காணாம போய் மூணு நாட்கள் ஆகுது, ஆனா நீங்க எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலன்னு சொல்லிருக்காங்க. அதுக்கு சிரிஷாவும், லச்சய்யாவும் திருதிருன்னு முழிச்சுருக்காங்க. இதனால அவங்க மேல போலீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. அதுக்கப்புறம் போலீஸ் ரெண்டு பேரையும் கண்காணிக்க ஆரம்பிச்சுருக்காங்க. இதுக்கிடையில போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு. அஞ்சய்யாவோட கழுத்துல காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துருச்சு.இதனால இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ், அஞ்சய்யாவோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப சம்பந்தம் இல்லாத சில நபர்கள் அவங்க வீட்ல இருந்து தப்பிச்சு போய்ருக்காங்க. இதனால வீட்ல இருந்த சிரிஷா, லச்சய்யான்னு எல்லாத்தையும் சுத்தி வளைச்சு பிடிச்ச போலீஸ் அவங்க கிட்ட விசாரணையில இறங்குனாங்க. கரீம்நகர்ல உள்ள லட்சுமிபுரம் கிராமத்தச் சேந்த காடெ அஞ்சய்யாவுக்கு 15 வருஷத்துக்கு முன்னாடி சிரிஷா-ங்குற பொண்ணோட கல்யாணமாகிருக்கு. அஞ்சய்யா சொந்த கிராமத்துல விவசாயம் பண்ணிட்டு இருந்தாரு. அப்புறம் குடும்ப கஷ்டத்துக்காக அவரு துபாய்க்கு போய்ட்டு வேலை பார்த்துக்கு சமீபத்துல சொந்த ஊரு திரும்பிருக்காரு. சொந்த ஊர் திரும்பனதுல இருந்தே சிரிஷாவோட நடவடிக்கையிலையும், லச்சய்யாவோட நடவடிக்கையிலையும் மாற்றம் தெரிஞ்சு இருக்கு. ரெண்டு பேரையும் கண்காணிக்க ஆரம்பிச்சுருக்காரு அஞ்சய்யா. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வேலை விஷயமா வெளியில போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு அஞ்சய்யா.அப்ப சரிஷாவும், லச்சய்யாவும் அறைக்குள்ள ஏடகூடமா இருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியான அஞ்சய்யா, மனைவியவும், தந்தையவும் போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. ரெண்டு பேரு புத்தியும் ஏன் இப்படி மாறிச்சு, இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கே கேவலம், அதனால இத்தோட இந்த பழக்கத்தை கைவிட்ருங்க, இல்லன்னா ரெண்டு பேரையும் உயிரோடையே விட்டு வைக்க மாட்டேன்னு மிரட்டிருக்காரு.ஆனா ரெண்டு பேரும் திருந்துற மாதிரி தெரியல. இதனால நொந்து போன அஞ்சய்யா இந்த விஷயத்த பத்தி தன்னோட நண்பர்கள் கிட்டயும், சொந்தக்காரங்க கிட்டயும் சொல்லி புலம்பிருக்காரு. அடிக்கடி மனைவி கூடவும், தந்தை லச்சய்யா கூடவும் சண்டை போட்ருக்காரு. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச சிரிஷா, அஞ்சய்யா உயிரோட இருக்குற வர்ற நம்ம நிம்மதியா வாழ முடியாது, அவர கொலை செஞ்சா தான் நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க முடியும்ன்னு நினைச்சு, லச்சய்யா கூட சேந்து கொலைக்கான திட்டத்த போட்ருக்காங்க.அதுக்காக அதே கிராமத்தை சேந்த ரவி என்பவர அணுகிருக்காரு லச்சய்யா. அதுக்கடுத்து அஞ்சய்யாவ கொலை செய்ய, கூலிப்படையே சேந்த கோடேஷ்வர், அவரது நண்பர் முகமது அப்ரார் கிட்ட மூணு லட்சம் ரூபாய் பேரம் பேசிருக்காரு. அதுமட்டும் இல்லாம ரெண்டு பேருக்கும் முன்தொகையா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய கொடுத்துருக்காரு லச்சய்யா. அதுக்கப்புறம் அஞ்சய்யா கிட்ட நட்பா பழக ஆரம்பிச்ச கோடேஷ்வரும், அப்ராருக்கு அவர அதே கிராமத்துல உள்ள கால்வாய்க்கு மதுக்குடிக்க கூப்டு போய்ருக்காங்க. அப்ப அஞ்சாய்யாவுக்கு போதை உச்சத்துல ஏறிருக்கு. அஞ்சய்யா போதையில நின்னுட்டு இருந்த நேரத்துல அவரோட கழுத்த நெரிச்சு கும்பல் அவர கொடூரமா கொன்னுருக்காங்க. சடலத்த அங்க உள்ள கால்வாய்ல தூக்கி வீசிட்டு ரெண்டு பேரும் தப்பிச்சு போய்ட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் தீர விசாரிக்க ஆரம்பிச்சாங்க. சிரிஷாவோட நடவடிக்கையிலையும், லச்சய்யாவோட நடவடிக்கையிலையும் மாற்றத்த கண்டு பிடிச்ச போலீஸ், ரவி கோட்டேஷ்வர், அப்ரார் ஆகியோர் பாக்கி பணத்த வாங்க லச்சய்யா வீட்டுக்கு வந்த நேரத்துல எல்லாரையும் போலீஸ் சுத்தி வளைச்சு பிடிச்சு எல்லோரையும் கம்பி எண்ண வச்சிருக்காங்க.