கீர்த்தி சனோன் இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மிமி என்ற படத்தில் வாடகைத் தாய் வேடத்தில் நடித்ததற்காக தேசிய திரைப்பட விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். ஹீரோபெண்டி படத்திற்காக இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.. இவர் நடிப்பில் வெளியான காதல் நகைச்சுவைப் படங்களான பரேலி கி பர்ஃபி மற்றும் லூகா சுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பெரிய பட்ஜெட் திரைப்படமான ஆதிபுருஷ்-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அவர்க்கு பல படங்கள் வெற்றியையும் கொடுத்தன.இந்நிலையில் படங்கள் கொடுத்த வெற்றி அவரை மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்று கொடுத்தன. மேலும் வசூல் வேட்டையை கொடுத்த ’தில்வாலே’ மற்றும் ’ஹவுஸ்ஃபுல் 4’ ரசிகர்களின் மனதில் இவருக்கு நீங்காத இடம் பிடிக்க உதவின. இவர் பல கதாபாத்திரங்களுக்காக பல விருதுகளை தன் கை வசம் வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான டோ பட்டி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து IIFA ன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இதனை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சானோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை தான் இணைய தொடரில் நடிக்க வேண்டுமெனில் அந்தக் கதை ரசிகையாக என்னை வியக்க வைக்க வேண்டும்.ஏனெனில் அது படத்தை விட நீளமாக இருக்கும். அதனால் அந்த அளவுக்கு நீண்ட நேரத்தில் நடிக்க என் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார் சானோன் . மேலும் ஸ்ட்ரீ 2, சாவா ஆகிய படங்கள் வசூலில் அசத்தியது நல்ல விஷயம். நல்ல விஷயங்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : புது டிரெண்டை உருவாக்கிய சமந்தா.. சம்பள விஷயத்தில் அதிரடி முடிவு