கேடிஎம் நிறுவனமானது 390 டியூக் மாடலை, க்ரூஸ் கண்ட்ரோல் வசதி மற்றும் புது கலருடன் அப்டேட் செய்திருக்கிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பைக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய பைக்கில் சிறப்பம்சங்களாக இருக்கும் 399cc திறன் கொண்ட என்ஜின் மற்றும் Powertrain-ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.