பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்கிழக்கில் மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இபாதிங்கா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதமடைந்ததில் 8 வயது சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், அருகிலுள்ள சான்டனா டோ பரெய்சோ நகரில் இருந்து மற்றொரு அடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.